ETV Bharat / bharat

'சுதந்திர போராட்டம் என்பது குறிப்பிட்ட சிலரின் வரலாறு இல்லை' - பிரதமர் மோடி! - அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி சிலை திறப்பு

சுதந்திர போராட்டம் என்பது குறிப்பிட்ட சிலரின் வரலாறு இல்லை, மாறாக அது நாட்டின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் இருந்த மக்களது தியாகத்தின் வரலாறு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Jul 4, 2022, 7:26 PM IST

Updated : Jul 4, 2022, 7:37 PM IST

பீமாவரம்: ஆந்திர மாநிலம் பீமாவரம் நகரில், சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாடு இந்த ஆண்டு ஒருபுறம் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. மறுபுறம் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125ஆவது பிறந்தநாள் விழாவும், ராம்பா கிளர்ச்சியின் 100ஆவது ஆண்டு தினமும் கொண்டாடப்படுகிறது. ராம்பா கிளர்ச்சிக்கு அல்லூரி தலைமை தாங்கினார். அவரை காடுகளின் நாயகன் என மக்கள் அழைத்தனர். அவர், சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், ஆதிவாசிகள் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இளம் வயதிலேயே உயிர்த்தியாகம் செய்தவர். அவரது வாழ்க்கை ஒரு முன்னுதாரணம். அல்லூரி இந்திய கலாச்சாரத்தின் அடையாளம், ஆதிவாசிகளின் அடையாளம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிந்து நின்றவர்.

சுதந்திர போராட்டம் என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளின், சில பகுதிகளின் அல்லது சில மக்களின் வரலாறு இல்லை, மாறாக அது, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்த மக்களின், அவர்களது தியாகத்தின் வரலாறு.

நமது இளைஞர்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நம் நாட்டை வழிநடத்தும் நிலையில், 'புதிய பாரதம்' உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. அல்லூரி சீதாராம ராஜுவின் தியாகம் நமக்கு அளிக்கும் உத்வேகம், நாட்டை எல்லையற்ற உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆந்திராவில் பிறந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை மறக்காமல், அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று முன்னேறுவோம்.

சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்தது போல், இப்போது நாட்டின் கனவுகளை நனவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம், பழங்குடியினர்களின் கலை ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றது, அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கான வருமானத்தையும் உறுதி செய்தது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, பீமாவரம் ஏஎஸ்ஆர் நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் ஷத்ரிய சேவா சமிதி சார்பில், 3 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட அல்லூரி சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: Yummy சூடான நொறுக்குத்தீனி 'சேவு' செய்யும் எளிய செய்முறை வீடியோ!

Last Updated : Jul 4, 2022, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.