ஒளிகளின் திருநாளான ’தீபாவளி’ பண்டிகை உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த இந்தியர்களும் இதை ஒவ்வொரு முறையில் கொண்டாடினாலும் வீட்டில் விளக்கு ஏற்றும் வழக்கம் அனைவரிடத்தும் பொதுவானதாக உள்ளது.
வட இந்தியாவில், ராமர் போரில் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பிய பண்டிகையை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். தென் இந்தியாவில், கிருஷ்ணர் நரகாசூரனை வதம் செய்து கொன்ற நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்களும், சமணர்களும் கூட இந்த தீபாவளியைக் கொண்டாடுவதுண்டு. சீக்கியர்கள் இந்த நாளை முகாலய மன்னர் ஜஹான்கிர் குரு ஹர்கோபிந்தை விடுதலை செய்த நாளாகக் கொண்டாடுகின்றனர். சமணர்களுக்கு இந்நாள் மகாவீர் மோட்சமடைந்த நாளாகப் பார்க்கப்படும்.
இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இந்த தீபாவளிப் பண்டிகை எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசம்: அயோத்தி, வாரணாசியில் தீபாவளியை தீபோட்சவ் மற்றும் தேவ் தீபாவளி ஆகிய பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அயோத்தியிலுள்ள சரயூ நதிக்கரையில் மண் விளக்குகளை மிதக்கவிடுவர். அதே, வாரணாசியில் கங்கை நதிக்கரையில் விளக்குகளை மிதக்கச் செய்வர் அப்பகுதி மக்கள்.
பஞ்சாப்: பஞ்சாபில் தீபாவளி பண்டிகை குளிர் காலத்தின் வருகையைக் குறிக்கும். ஆகையால் விவசாயிகள் முதற் கட்ட விதைகளை நிலத்தில் பயிரிடத்தொடங்குவர். அம்ரிஸ்டரிலுள்ள தங்கக் கோயிலில் ஆயிரக் கணக்கான விளக்குகள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும்.
மேற்கு வங்காளம்: பெங்காலிகள் தீபவளியை காளி தேவியை வாங்கிக் கொண்டாடுவர். காளி பூஜை பண்டிகைகளோடு தொடர்ந்து இது சேர்ந்து வருவதால் பல கோளி கோயில்களில் தீபாவளி கொண்டாட்டங்களும் நடைபெறும். மேலும், மாலை நேரங்களில் வெடி வெடித்தும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவர்.
குஜராத்: குஜராத்தைப் பொறுத்தவரை தீபாவளி என்பது கலசார ஆண்டின் முடிவு. இப்பகுதிகளில் தீபாவளியன்று லக்ஷ்மி பூஜைகள் நடைபெறும். மேலும், தீபாவளி முடிந்து ஐந்தாவது நாள் புதிய ஆண்டுக்கான தொழிலைத் தொடங்குவதாக பண்டிகை நிறைவுபெறும்.
மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ’வசு பராஸ்’ பண்டிகையிலிருந்து ஆரம்பிக்கும். தீபாவளியன்று லக்ஷ்மியை வணங்கி கல்யாண உறவை கொண்டாடும் பண்டிகையாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படும். இந்தப் பண்டிகை பாவ் பிஜ் எனும் பண்டிகையோடு நிறைவடையும்.
கோவா: இங்கும் தீபாவளியை கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாகவே கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளியன்று நரகாசுரனின் உருவ பொம்மைகள் தெருக்களில் கொண்டுசெல்லப்பட்டு எரிக்கப்படும். இது ஒளிகளின் பண்டிகையாகவும், இருளின் முடிவாகவும் பார்க்கப்படும். தென் இந்திய மக்களைப் போலவே இவர்களும் காலையில் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு தீபாவளியை ஆரம்பிப்பார்கள்.
இதையும் படிங்க:தீபாவளியன்று சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியவை...!