ETV Bharat / bharat

'இந்து' மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே

இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, 'இந்து' என்ற வார்த்தையை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 1, 2022, 2:06 PM IST

அஸ்வினி குமார் சௌபே
அஸ்வினி குமார் சௌபே

ஹைதராபாத்: பாரத் நிதி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 10ஆவது 'டிஜிட்டல் இந்து மாநாடு' தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (ஏப்.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்து என்பது புவியியல் அடையாளம். இமயமலை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்துக்களாக உள்ளனர். நமது நாடு அறிவு பூமி என்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.

இந்தியா சிறந்த ஜனநாயக நாடு: இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, 'இந்து' என்ற வார்த்தையை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒருபோதும் கட்டுப்படுத்தக்கூடாது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருப்பது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பலத்தை அடையாளப்படுத்துகிறது" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாட்டிற்கு எடுத்துக்காட்டு. இது உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இந்திய நாட்டை தாயாகக் கருதுகிறோம். அதனால் இந்தியாவை 'பாரத மாதா' என்று குறிப்பிடுகிறோம். இதுவே நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டார்.

நதிகளை மீட்டெடுப்பதில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கங்கை நதியை தூய்மைப்படுத்தி, புத்துயிர் பெறச் செய்ய 'நமாமி கங்கை' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1000 இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் முரளிதர் ராவ், எம்பி மனோஜ் திவாரி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான ரயில் தொடக்க விழாவில் தடம் புரண்டதால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.