சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவுக்கு இன்று (டிசம்பர் 19) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் (சிஎம்ஓ) தெரிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சுக்விந்தர் சிங் சுகு சந்திக்க இருந்தார். இதற்காக நேற்று (டிசம்பர் 18) கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டார். இந்த பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இமாச்சலப் பிரதேசத்தின் 15ஆவது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் டிசம்பர் 11ஆம் தேதி பதவியேற்றார். இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சுக்விந்தர் சிங், நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார்.
இதையும் படிங்க: ஏவுகணை அழிப்பான் போர்க்கப்பலான ஐஎன்ஸ் மொர்முகோவ் கடற்படையில் இணைந்தது