ETV Bharat / bharat

எல்லைப்பகுதியில் சுரங்கப்பாதை? தீவிரவாதிகள் ஊடுருவலா? - ஜம்மு காஷ்மீர்

சர்வதேச எல்லைப் பகுதியில் சுரங்கப்பாதையின் முகப்பு போன்ற அமைப்பை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதன் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Jammu
Jammu
author img

By

Published : May 5, 2022, 2:53 PM IST

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் சுரங்கப்பாதையின் முகப்பு போன்ற அமைப்பை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர், "இது சுரங்கப்பாதையாக இருக்கக்கூடும், இதுதொடர்பாக பாதுகாப்பு படை வீரர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி சம்பா பகுதியில் ஜெஷ்ஷ்-இ-முகம்மது தீவிரவாதிகள் இரண்டு பேர் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் சுரங்கப்பாதை வழியாக ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தோம். இந்த நிலையில், சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் கூறுகையில், " இந்த சம்பவத்துடன், கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை ஒப்பிட்டு பார்த்தால், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மிகப்பெரிய திட்டத்துடன் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த மாதம் 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சம்பா மாடவத்திற்கு வந்திருந்தார். அவரது வருகையொட்டி தாக்குதல் நடத்தும் நோக்கில் அவர்கள் வந்திருக்கக்கூடும். அநேகமாக அவர்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம்" என்று தெரிவித்தார்.

சர்வதேச எல்லைப் பகுதியில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சம்பா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா; அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.