காந்திநகர்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கடத்தப்படுவதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவனருக்கும், வருவாய் புலனாய்வு இயக்குனரக (DRI) அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பிபாவாவ் துறைமுகம் விரைந்த அலுவலர்கள், கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. முதல்கட்ட தகவலில், இந்த 90 கிலோ ஹெராயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.450 கோடி என்பது தெரியவந்துள்ளது. குஜராத்தில் சில ஆண்டுகளாகவே அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. குறிப்பாக கடந்த ஏழு நாள்களில் மட்டும் மொத்தம் 436 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2,180 கோடி ரூபாயாகும்.
இதையும் படிங்க: ரூ.2,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்