இச்சம்பவம் குறித்து சிறப்பு பணி குழுவினர் தெரிவிக்கையில், "வங்கதேச எல்லை பகுதிகளின் வழியே முறைகேடாக போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினர் சந்தேகித்தனர். பின்னர் ஹெராயின் தரத்தினை கொண்டு அவை மியான்மரிலிருந்து கொண்டு வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மால்டாவில் வசிக்கும் ஹலிம் சேக் என்ற 40 வயது மதிக்கத்தக்க நபரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று மாலை காவல் துறையினர் கைது செய்தனர். அவரது இருப்பிடத்தை சோதனையிட்டதில் அங்கு 3.75 கிலோ ஹெராயின் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 20 கோடி என தெரிகிறது.
முதன்மை விசாரணைக்குப் பின்னர், எஸ்ப்ளேனேட் பகுதியிலிருந்து கொல்கத்தாவிலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் ஒப்படைக்க இங்கு ஹெராயின் கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புடையது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரம்: தொலைக்காட்சி நடிகை ப்ரீதிகா சவுகானை கைது செய்த என்சிபி !