திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை அலுவலர்கள் மற்றும் அஸ்ஸாம் போலீசார் நேற்று (அக். 11) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரீம்கஞ்ச் புதிய ரயில் நிலையம் அருகே மிசோரமில் இருந்து திரிபுரா நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது, 764 சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த ஹெராயின் பொட்டலங்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், அந்த ஹெராயின் பொட்டலங்கள் 9.47 கிலோ எடையும், ரூ.47.4 கோடி மதிப்பு கொண்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த வாரம் குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்