ETV Bharat / bharat

மாண்டுபோன மகனை மார்பில் சுமந்த தந்தை.. ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் பரிதாபம்! - மகனை தோளில் சுமந்த தந்தை

ஒடிசாவில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மகனை அவரின் தந்தை தோளில் சுமந்து நடந்து வீடு சென்றுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.

dead son
dead son
author img

By

Published : Mar 21, 2022, 5:22 PM IST

ராயகடா (ஒடிசா) : கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைய செய்யும் நிகழ்வு ஒடிசாவில் மீண்டும் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த தனது மகனை தோளில் சுமந்துக்கொண்டு தந்தை நெடுந்தூரம் நடந்துள்ளார்.

இது தொடர்பாக கண்ணீர் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவிவரும் இந்தக் காணொலியில் கண்ணீர் குளமாக உயிரிழந்த 9 வயது சிறுவனின் பெற்றோர் சாலைகளில் நடந்துவருகின்றனர்.

மடிந்த தனது மகனை தோளில் தூக்கிக் கொண்டு நெஞ்சை கல்லாக்கி நடந்துவருகிறார் அவரின் தந்தை. இந்தச் சம்பவம் மார்ச் 18ஆம் தேதி நடந்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி உயிரிழந்த அந்த 9 வயது பிஞ்சுயின் பெயர் ஆகாஷ்.

இவரின் உடல் நிலை சரியில்லாத நிலையில் அவரின் தந்தை சுர்தார் பெனியா மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணித்துவிட்டார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆகாஷின் உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் வசதியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால், மருத்துவமனையில் இருந்து வீடுநோக்கி சுர்தார் பெனியா மகனை தோளில் சுமந்தப்படி நடந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நடந்த நிலையில் இந்தச் சம்பவம் காணொலி வாயிலாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். லால் மோகன் ராவ்தாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பெட்ரோல் பங்கில் பரிதாபம்: சண்டையை தடுத்தவர் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.