ETV Bharat / bharat

டெல்லியில் சூறைக்காற்றுடன் கனமழை... விமான சேவை பாதிப்பு - டெல்லியில் கனமழை

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Delhi
Delhi
author img

By

Published : May 27, 2023, 3:19 PM IST

டெல்லி: கோடை காலத்தின் உச்சமாக டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், இன்று (மே 27) காலை டெல்லி மற்றும் தலைநகர் மண்டல பகுதிகளில் (NCR) சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

சாலைகளை மழைநீர் ஆக்கிரமித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். டெல்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரீதாபாத், யமுனா நகர், குருசேத்திரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றியதுடன், மின் தடையை சரி செய்தனர்.

காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்ததால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு விமானங்கள் புறப்பட்டு வந்த நிலையில், பலத்த காற்று வீசியதால் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்னர் 6 விமானங்கள், ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல் டெல்லிக்கு வந்து கொண்டிருந்த சில ரயில்களும் கனமழை மற்றும் சூறைக்காற்றால் நடுவழியில் நிறுத்தப்பட்டன. ஒருசில ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக டெல்லி வந்தடைந்தன.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் 2 முதல் 3 நாட்கள் மழை நீடிக்கும். மே 30ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இருக்காது. நடப்பு மாதத்தில் நாடு முழுவதும் வழக்கத்தை விட குறைந்த அளவுக்கே மழை பெய்துள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் பிற வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகளவில் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நடப்பாண்டு ஜூன் 4ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மேற்கு பருவமழை நடப்பாண்டு மிதமான அளவில் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜெனமணி கூறுகையில், "நாடு முழுவதும் ஜூன் மாதம் 92 சதவீதத்துக்கும் குறைவான அளவில் மழை பெய்துள்ளது. பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் 70-80 சதவீதத்துக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்துள்ளது. வெப்ப அலைகள் குறைந்து வருவதால், இனி படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும்" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.