ETV Bharat / bharat

சுற்றுலாவில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த தலைமை ஆசிரியை..! நடவடிக்கை எடுக்கப் பெற்றோர் கோரிக்கை! - பெற்றோர்கள் கண்டனம்

Karnataka teacher: கர்நாடக மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளியில் சுற்றுலா சென்ற போது தலைமை ஆசிரியர் உடன் மாணவர்கள் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவரும் நிலையில் தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

headmistress students photoshoot goes viral Parents seek action in Karnataka
சுற்றுலாவின் போது தலைமை ஆசிரியையுடன் புகைப்படம் எடுத்த மாணவர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 5:03 PM IST

சிக்கபள்ளாப்பூர் (கர்நாடகா): சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியிலுள்ள அரசுப் பள்ளியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை மாணவர்களுடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆக தொடங்கியுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த புகைப்படத்தில் தலைமை ஆசிரியையுடன் மாணவர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தலைமை ஆசிரியையுடன் மாணவர்கள் எடுத்துள்ள விதவிதமான புகைப்படங்களைப் பார்க்க முடியவில்லை எனவும், புகைப்படங்கள் மோசமாக உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், தலைமை ஆசிரியை இது போன்று மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறித்துப் பெற்றோர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தலைமை ஆசிரியையின் இந்த செயல் குறித்து வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: படிப்பதற்கு டார்கெட் வைக்கசொன்னால் குடிப்பதற்கு டார்கெட் வைக்கிறார்கள் - நடிகை கஸ்தூரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.