ETV Bharat / bharat

''சர்டிபிகேட் கேட்டது குத்தமா?'' - பிரதமரின் கல்விச்சான்றினை RTI-யில் கேட்ட கெஜ்ரிவாலுக்கு ஃபைன்!

author img

By

Published : Mar 31, 2023, 5:04 PM IST

Updated : Mar 31, 2023, 5:11 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய தகவல் ஆணையம் (CIC) பிறப்பித்த உத்தரவை, குஜராத் நீதிமன்றம் ரத்து செய்தது.

pm modi
பிரதமர் மோடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி 1978ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், 1983ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்ததாகவும், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமரின் கல்வித்தகுதி விவரங்களைத் தருமாறு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. பின்னர் அவர் மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்த விவரங்களை குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் வழங்க மத்திய தகவல் ஆணையம் (CIC) உத்தரவிட்டது. இதை எதிர்த்து, குஜராத் பல்கலைக்கழகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, "கல்வி விவரங்களை வெளியிட பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை. ஜனநாயக நாட்டில் பொறுப்பில் இருக்கும் நபர் படித்தவரா, இல்லையா என்பது அவசியம் இல்லை. பொதுச்செயல்பாடுகள் குறித்த விவரங்களை தான் ஆர்டிஐ மூலம் கேட்க முடியும்" என்றார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழை தான் கேட்கிறோம். அவரது மதிப்பெண் சான்றிதழை கேட்கவில்லை" என வாதாடினார்.

வாதங்களை கேட்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்ற, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். அந்த பணத்தை 4 வாரங்களுக்குள், குஜராத் சட்ட சேவைகள் ஆணையத்திடம் அவர் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல்

Last Updated : Mar 31, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.