பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான் மனு மீது தீர்ப்பு வழங்க நேரமில்லை என நீதிபதி சி.வி.பதாங் வழக்கை ஒத்திவைத்தார்.
முன்னதாக சல்மான் கான் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கேதன் கக்கட் மீது தாக்கல் செய்த மனுவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் கேதன் கக்கட், தான் குறித்த அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும் அந்த வீடியோக்கள் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதால் உடனே அந்த வீடியோக்களை நீக்கவும் சல்மான்கான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வீடியோக்களில் சல்மான் கான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் கேதன் தரப்பு வழக்கறிஞர் சல்மான் கான் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த வழக்கு குறித்த விசாரணை முடிந்த நிலையில் இன்று (நவ-3) தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நீதிபதி சி.வி.பதாங் ஓய்வுபெற்றதால் தீர்ப்பு வழங்க நேரமில்லை எனத்தெரிவித்து மற்றொரு அமர்விற்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார். தீர்ப்பு வழங்கவே முயற்சி செய்ததாகவும், இருப்பினும் நேரமின்மை காரணமாக இயலவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு