தலைநகர் டெல்லியில் நிலவும் கோவிட்-19 பாதிப்பு குறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிரதிபா சிங் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது முதலில் ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்டவைத் தட்டுப்பாடாக இருந்த நிலையில், தற்போது ரெம்டெசிவிர் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நகரமும் ரெம்டெசிவிர் மருந்தில்லாமல் தவித்துவருகிறது.
பெருந்தொற்று காலத்தில் மருந்துகளை கூட முன்னேற்பாடாகத் தயார் செய்யாமல் மத்திய, மாநில அரசுகள் தவறவிட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருந்துக் கட்டுப்பாடு அமைப்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: "எனது மகள், எனது பெருமை" மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி ட்வீட்டின் காரணம்?