ETV Bharat / bharat

மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம்...! - ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம்..! - ராகுல் காந்தி

author img

By

Published : Sep 4, 2022, 5:38 PM IST

புது டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தும் மாபெரும் ஊர்வலமான ‘மெஹன்கை பர் ஹல்லா போல்’ எனும் ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “ பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நாட்டைப் பிரித்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளனர். தங்களின் வருங்காலம், வேலைவாய்ப்பின்மை போன்றவைகள் மக்களை வெறுப்புக்குள்ளாக்கியுள்ளன” என்றார்.

மேலும், “இந்தியாவில் வெறுப்பு மனநிலை வளர்ந்து வருகிறது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகின்றனர். இந்த அச்சத்தால் யாருக்கு லாபம்..? ஒரு ஏழை, விவசாயி அல்லது ஒரு சிறு வியாபாரி இந்த நரேந்திர மோடி அரசினால் லாபம் அடைய முடிகிறதா..? இந்த பயம் மற்றும் வெறுப்பு மனநிலையால் வெறும் இரண்டே தொழிலதிபர்கள் மட்டுமே இந்தியாவில் லாபம் அடைகிறார்கள். மோடியின் கொள்கை முடிவுகள் இரண்டே தொழிலதிபர்களுக்கு மட்டும் லாபத்தைக் கொடுக்கிறது.

நரேந்திர மோடி பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்தார். அதனால் எழை மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது..?. மூன்று விவசாய சட்ட மசோதா கொண்டு வந்தது கூட விவசாயிகளுக்காக அல்ல. அந்த இரண்டு தொழிலதிபர்களுக்காகத் தான். பின்பு, விவசாயிகள் தெருவில் இறங்கி தங்களின் பெரும் எதிர்ப்பை காட்டியதால் அது நிராகரிக்கப்பட்டது “ என்றார்.

சிறு மற்றும் குறு வியாபாரங்களின் முதுகெழும்பை பிரதமர் நரேந்திர மோடி உடைத்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ”ஒரு பக்கம் நீங்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டு வருகிறீர்கள், மறு பக்கம் அதிகரிக்கும் விலைவாசி. காங்கிரஸ் கட்சி 70 வருடங்களாக என்ன செய்தது என நரேந்திர மோடி கேட்கிறார். நான் சொல்கிறேன், 70 வருடங்களாக காங்கிரஸ் கட்சி இத்தகைய விலை வாசி ஏற்றத்தை ஏற்படுத்தியதேயில்லை” என்றார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, ஊடகங்களையும் தாக்கினார். அதில், “ஊடகமும் இந்த இரு தொழிலதிபர்களின் கீழே உள்ளன. இது யாரது சேனல் அது யாருக்காக வேலை பார்க்கும் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள் என இரண்டும் இந்த இரண்டு தொழிலதிபர்களுடையதாகிவிட்டது.

இந்த இரண்டு தொழிலதிபர்களுக்காக நரேந்திர மோடி வேலைப பார்ப்பார், மறுபக்கம் நரேந்திர மோடிக்காக இந்த இரண்டு தொலிலதிபர்களும் வேலை பார்ப்பார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், “அமலாக்கத்துறை என்னை 55 மணிநேரம் உட்கார வைத்தது. எனக்கு உங்களின் அமலாக்கத்துறை பற்றியெல்லாம் கவலையில்லை. என்னை 55 மணிநேரமோ, 5 மாதங்களோ, அல்லது 5 வருடங்களோ கூட உட்கார வைக்கட்டும்” என்றார்.

“நமது பிரதமரின் சித்தாண்டமே நாட்டை கூறாகப் பிரித்து அதன் லாபத்தை சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே தருவது தான். எங்கள் ஆட்சியில் 27 கோடி பேரை வறுமை நிலையில் இருந்து மீட்டோம். ஆனால், இந்த ஆட்சியில் 23 கோடி பேரை வறுமைக்குத் தள்ளியுள்ளனர். நரேந்திர மோடி நாட்டை பின்னுக்குத் தள்ளி வருகிறார். இது பாகிஸ்தானிற்கும் சீனாவிற்கும் உதவியாக இருக்குமே ஒழிய நிச்சயம் இந்தியாவிற்கு இருக்காது. வெறுப்பும், அச்சமும் மக்களிடையே பரவ, பரவ நாடு பலவீனமாகும்.

விலைவசி உயர்வும், பரவி வரும் வெறுப்பு மனநிலையும் நாட்டை பலப்படுத்தியதா என்ன..? நரேந்திர மோடியும், பாஜகவும் நாட்டை பலவீனாமாக்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி நாட்டை ஒற்றுமையாக இணைக்கிறது. நாங்கள் பரவி வரும் வெறுப்பு மனநிலையை அழிப்போம். அதன் பின் நாடு தன்னாலே வளரும். காங்கிரஸின் சித்தாண்டமே நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது தான்.

நாங்கள் சீனா தாக்குதல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றைப் பற்றி பேச நினைக்கிறோம். ஆனால், பாஜக எங்கள் கட்சியைத் தடுக்கிறார்கள். ஊடகம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் நெறுக்கடியில் உள்ளன. இருக்கும் ஒரே வழி மக்களிடம் செல்வது தான். அதனால் தான் நாங்கள், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ தொடங்கவுள்ளோம். இது சித்தாண்ட சண்டை, இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு தந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் -ஐ வீழ்த்த வேண்டும்” என ராகுல் காந்தி கேடுக் கொண்டார்.

இதையும் படிங்க: படிப்பில் மகளுக்கு போட்டி... பள்ளி மாணவன் விஷம் வைத்து கொலை... பெண்ணின் கொடூர செயல்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.