ETV Bharat / bharat

Haryana violence: உயிரிழப்பு 6ஆக உயர்வு.. 116 பேர் கைது.. குற்றவாளிகள் தப்ப முடியாது - முதலமைச்சர்! - ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்

மத ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 116 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார். கலவரத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 57 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Manohar Lal Khattar
Manohar Lal Khattar
author img

By

Published : Aug 2, 2023, 12:49 PM IST

நுஹ் :அரியானாவில் மத ஊர்வலத்தில் வெடித்த கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 116 பேர் கைது செய்யப்பட்டு நிலையில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.

அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. குருகிராம் - ஆல்வார் அருகே வந்த ஊர்வலதத்தை சிலர் தடுத்து நிறுத்திய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

கலவர பூமி போல் இடம் காட்சி அளித்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கலவரத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர் உள்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்த நிலையில், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கலவரம் தொடர்பான வதந்திகள் பரவாமல் தடுக்க நுஹ் பகுதியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.

நுஹ், பல்வால், பரிதாபாத், ரெவாரி, குருகிராம், மகேந்திராபாத், சோனிபட், பனிபட் ஆகிய 8 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போலீசார், துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அரியானாவுக்கு அருகில் உள்ள டெல்லியிலும் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், கலவரச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.

நுஹ் கலவரம் தொடர்பாக ஏறத்தாழ 116 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், கலவரத்திற்கு சதித் திட்டம் தீட்டிய யாரும் தப்ப முடியாது என்றும் முதலமைச்சர் கட்டார் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும் விரைவில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கலவரம் பாதித்த நுஹ் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி இருப்பதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். அதேநேரம் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பொது மக்கள் பேணுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலவரத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா 57 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கலவரம் தொடர்பாக 44 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் 20 துணை ராணுவ படை கம்பெனி களமிறக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Parliament adjourned : 10வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.