ETV Bharat / bharat

சண்டிகர் விவகாரம்: பஞ்சாப்பை எதிர்த்து ஹரியானா தீர்மானம் நிறைவேற்றம்!

author img

By

Published : Apr 6, 2022, 10:29 AM IST

சண்டிகரை உரிமைகோரி பஞ்சாப் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப்பை எதிர்த்து ஹரியானா தீர்மானம் நிறைவேற்றம்

கர்னல் (ஹரியானா): பஞ்சாபில் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய பின்னர், கடந்த ஏப். 1ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டது. அதில், சண்டிகரை பஞ்சாபின் நிரந்தர தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதற்கு, ஹரியானாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அம்மாநில சட்டப்பேரவை நேற்று (ஏப். 5) கூடியது. ஒருநாள் சிறப்பு கூட்டத்தொடரில், பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில், "சண்டிகர், சட்டப்படி பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகர். எனவே, ஹரியானாவுக்கும் சண்டிகரில் உரிமையுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் எதிர்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைவரின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு. சட்டப்பேரவையில் மூன்று மணிநேரம் விவதாம் நடைபெற்றது. அத்துடன், சட்லஜ் - யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை உடனே செயல்படுத்தக் கோரியும், இந்தி பேசும் கிராமங்களை ஹரியானாவிடம் பஞ்சாப்பை ஒப்படைக்க கோரியும் விவாதம் நடைபெற்றது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், "சண்டிகர் பிரச்சனை என்பது சட்டப்பேரவையில் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் நிறைவேற்றுவது அல்ல, அது உட்கார்ந்து பேசி தீர்க்கப்பட வேண்டியது. நிச்சயம், பஞ்சாபின் தீர்மானத்திற்கு பின் ஒரு மறைமுக திட்டம் உள்ளது. மக்கள் அவர்களின் மறைமுக திட்டத்தை புரிந்துகொள்வார்கள். சண்டிகர் இப்போதும், எப்போதும் ஹரியானா மற்றும் பஞ்சாபின் தலைநகர்தான்" என தெரிவித்தார்.

ஹரியானா பஞ்சாபில் இருந்து 1966ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. மேலும், இந்த பிரிவினை ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான உரிமையை நிர்ணயம் செய்ய ஷா கமிஷன் அமைக்கப்பட்டது. இருப்பினும், 1966, ஜூன் மாதத்தில் சண்டிகரை யூனியன் பிரதேசமாக ஒன்றிய அரசு அறிவித்தது. பிரிவினைக்கு பின், சண்டிகர் இவ்விரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.