நுஹ் : ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில், புன்ஹானாவிலிருந்து ஹோடல் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது, எதிரே வந்த குப்பை லாரி இன்று (ஜூலை 23) மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தன. லாரிக்கு கீழே ஆட்டோ சிக்கியதாக தெரிகிறது.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஆட்டோவில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். பிறகு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 11 பேரில், 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க:லக்னோவில் இனி போக்குவரத்தை கண்காணிக்க ஆசிரியர்கள்...