பானிபட்: ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள தெஹ்சில் கேம்ப் பகுதியில் கொல்கத்தாவை சேர்ந்த ஏழு குடும்பங்கள் தற்காலிக குடிசை அமைத்து தங்கியுள்ளனர். இன்று(ஜனவரி 12) காலை அதில் ஒரு குடியிருப்பில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த குடிசை மற்றும் கட்டிடங்களிலும் தீ பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் ஏற்கனவே மூவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அப்துல் கரீம் (50), அவரது மனைவி அஃப்ரோசா (46), இஷ்ரத் காதுன் (17), ரேஷ்மா (16), அப்துல் ஷகூர் (10) அஃபான் (7) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு தினாஜ்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இந்த 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு