ETV Bharat / bharat

ஜனவரியில் கரோனா தடுப்பூசி! - covid-19 vaccine

கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு யாரையும் கட்டாயப்படுத்தாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் கரோனா தடுப்பூசி!
ஜனவரியில் கரோனா தடுப்பூசி!
author img

By

Published : Dec 21, 2020, 10:39 AM IST

Updated : Dec 21, 2020, 1:22 PM IST

டெல்லி: ஜனவரியில் இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் தடுப்பூசி

கரோனா தடுப்பூசி குறித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "ஜனவரி மாதம் (2021), மக்களுக்கு முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையில் இந்தியா இருக்கக்கூடும். தடுப்பூசிகளின் பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றிற்கே மத்திய அரசு முதல் முன்னுரிமை அளிக்கிறது. அதில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை. ஜனவரி மாதத்தில் இந்திய மக்களுக்கு நாட்டின் முதல் கரோனா தடுப்பூசியை செலுத்தும் நிலையில் இந்தியா இருக்கக்கூடும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்” என்றார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் குறைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுடன் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஒன்பது கரோனா தடுப்பூசி மருந்துகள் பல்வேறு கட்டங்களில் மருத்துவப் பரிசோதனைகளின் உள்ளன.

கரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 624 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 29 ஆயிரத்து 690 பேர் நேற்று ஒரே நாளில் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 லட்சத்து 80 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 477 ஆக உள்ளது.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு யாரையும் கட்டாயப்படுத்தாது. ஆனால், தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்குச் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தடுப்பூசி விழிப்புணர்வு

தடுப்பூசி எடுத்துகொள்வதற்கு பொதுமக்கள் இடையே ஏற்படும் தயக்கத்தை, விழிப்புணர்வு மூலம் களைக்கப்படும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி நாட்டு மக்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி முன்னுரிமை

குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இருக்கும்பட்சத்தில், தனியார் மற்றும் பொதுத் துறையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், கரோனாவிற்கு எதிரான முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறை, பிற முன்னணி ஊழியர்கள், 50 வயதை கடந்தவர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்தியாவில் சுமார் 26 கோடி மக்கள், 50 வயதை கடந்தவர்கள். அதன் பிறகு, பிபி, இதயம், சிறுநீரகப் பிரச்சினைகள் போன்ற 50 வயதிற்குள்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்" எனத் தெரிவித்தார்.

கட்டாயம் இல்லை

இறுதியாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் விரும்பவில்லை என்றால், அவர்களை அரசு கட்டாயப்படுத்தாது எனக் கூறினார்.

புதிய வகை கரோனா வைரஸ் அச்சம் தேவையில்லை

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. பிற நாடுகளில் கரோனா வைரஸின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.

இதுதொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 21, 2020, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.