உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மத குருவான யதி நரசிங்கானந்த் என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஜன.16ஆம் தேதி கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார்.
இவரின் கைதுக்கு சில நாள்களுக்கு முன்னர் இதே புகாரில் ஜிதேந்திர நாராயண் தியாகி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணை கேட்டு யதி நரசிங்கானந்த் சார்பில் ஹரித்வார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட நரசிங்கானந்த்துக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து நரசிங்கானந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மூன்றாம் அலையில் உயிரிழப்புகள் குறைவு - தடுப்பூசிக்கு நன்றி: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்