கவுகாத்தி (அசாம்): அசாம் மாநிலம் கவுகாத்தி நகர எல்லையில் உள்ள கஹிலிபரில் பிறந்து 5 மாதமே ஆன தனது சொந்த மகனை சித்திரவதை செய்து கை கால்களை உடைத்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர். தந்தையின் இந்த காரியத்தால் பலத்த காயமடைந்த குழந்தை தற்போது கவுகாத்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறது. கஹிலிபரில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனியில் இந்த அதிர்ச்சியும், நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. சித்திரவதைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இதையும் படிங்க: பாமக மகளிர் அணி தலைவி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - தகாத உறவால் நடந்த கொலை!
குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஜர்னலிஸ்ட் காலனி பகுதியில் வசித்து வரும் அல்கேஷ் கோஸ்வாமி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் இப்போது கைது செய்யப்பட்டு பகதத்பூர் காவல் துறையின் காவலில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்கேஷ் கோஸ்வாமி தனது மனைவிக்கு தெரியாமல் இவ்வாறு கை, கால்களை உடைத்து குழந்தையை சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது.
குழந்தையின் கை கால்களை அல்கேஷ் கோஸ்வாமி வியாழன் அன்று முறித்து உள்ளார். இந்த கடுமையான வலியினால் குழந்தை வியாழக்கிழமை இரவும் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து அழுது கொண்டிருந்து உள்ளது. வழக்கத்திற்கு மாறாக குழந்தை கடுமையாக அழுதுள்ளது. இதனால் அதே காலனியில் வசிக்கும் ஒரு பெண் அல்கேஷ் கோஸ்வாமி வீட்டில் ஏதோ தவறு நடக்கிறது என்று சந்தேகப்பட்டார்.
பின்னர் வெள்ளிக்கிழமை கவுகாத்தி அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு இரண்டு கால்களும், ஒரு கையும் மோசமாக முறிந்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கு இடையில், வெள்ளிக்கிழமை மாலை, அப்பகுதி மக்கள் குழந்தையின் தந்தையிடம் குழந்தைக்கு என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்போது அல்கேஷ் கோஸ்வாமி தனது குழந்தையை தாக்கி கை, கால்களை உடைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அல்கேஷ் கோஸ்வாமியை போலீசில் ஒப்படைத்தனர்.
கஹிலிபாராவில் உள்ள பத்திரிகையாளர்கள் காலனியில் வாடகைக்கு குடியிருந்து வரும் அல்கேஷ் கோஸ்வாமி தனது 5 மாத குழந்தையை தாக்கி கை, கால்களை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கேஷ் கோஸ்வாமியை விசாரித்த போலீசார், அவர் தனது மகனை இவ்வாறு சித்திரவதை செய்ய தூண்டியது எது என்பது இதுவரை வெளிவரவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட்டைப்போட்டு தங்கத்தை ஆட்டைப்போட்ட கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?