அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எஸ்.பி.ரிங் ரோடு பகுதியில் குழந்தை கடத்தல் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஆண், பெண் என இருவரைக் கைது செய்தனர்.
இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் கூறியதாவது, "ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்டவர்கள் பிபின் ஷிர்சாத், மோனிகா பிபின் ஷிர்சாத் என அடையாளம் காணப்பட்டதாகவும், இருவரும் தம்பதி என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் தம்பதி ஊருக்காகத் தொண்டு நிறுவனம் நடத்திவிட்டு, தெலங்கானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மறைமுகமாகக் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளாதாகவும், ஐதராபாத்திலிருந்து 2 லட்ச ரூபாய் கொடுத்து குழந்தையைக் கடத்தி குஜராத்தில் விற்க முயன்ற போது பிடிபட்டதாக போலீசார் கூறினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை கடத்தல் வழக்கில் மகாராஷ்டிரா போலீசார் பிபின் தம்பதியைக் கைது செய்த நிலையில், வழக்கிலிருந்து நழுவி குஜராத்திற்கு குழந்தை கடத்த வந்ததாகவும், மராட்டிய போலீசார் வழங்கிய ரகசிய தகவலில் கையும் களவுமாக பிபின் தம்பதியை கைது செய்ததாக போலீசார் குறிப்பிட்டனர்.
மேலும் கடத்தலில் கைதேர்ந்தவர்களான பிபின் தம்பதி, ஆண் குழந்தைக்கு லாலிபாப் என்றும் பெண் குழந்தைக்கு சாக்லேட் என்றும் கோடு வேர்டு வைத்து நேர்த்தியாக குழந்தை கடத்தியதால் வெகு விரைவில் குழந்தை கடத்தல் குற்றங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் கூறினர். பிபின் தம்பதியிடம் தொடர் விசாரணை நடத்தி குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஏஜெண்டுகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எட்டு வயது வளர்ப்பு மகனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள்