அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு இன்று (ஜன 29) நடைப்பெற இருந்தது. மொத்தம் உள்ள 1,181 பணியிடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். குஜராத் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வினாத்தாள் லீக்காகி சர்ச்சையை கிளப்பியது.
அதன் காரணமாக தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை போலீசார் கைது செய்து விவாரித்து வருவதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதோடு தேர்வர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேர்வு வாரியம் வருத்தம் தெரிவித்ததுடன், தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
இந்த தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில், குஜராத் மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட 15ஆவது அரசுப் போட்டித் தேர்வு இதுவாகும்.
மாநில அரசு இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறது. இதுபோன்ற செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். அதோபோல குஜராத் ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை