ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் 26 வார கருவை கலைக்க குஜராத் நீதிமன்றம் அனுமதி! - அறிக்கை

Gujarat high court allows terminate pregnancy: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண், உடல் அளவிலும் மற்றும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், 26 வார கருவை கலைக்க, குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் 26 வார கருவை கலைக்க குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:21 PM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வில், அவர் கருத்தரித்து இருந்தார். 26 வார கருவை அவர் சுமந்த் நிலையி, தற்போது அவர், குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு உடல்நிலை இல்லை. அவர் தற்போது மனதளவிளும், உடல் அளவிலும் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளதால், அந்த கருவை கலைக்க அனுமதி கோரி, ஆகஸ்ட் 22ஆம் தேதி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் அந்த பெண், தற்போது இல்லை. உடல் அளவிலும், மனதளவிலும் அப்பெண் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளதாக, அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருந்த நிலையில், அபபெண்ணின் வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க பரிந்துரைத்து இருந்தது.

இந்த நிலையில், அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீர் ஜே டேவ் தலைமையிலான அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணை, மருத்துவ வாரிய மருத்துவர்கள் முழுவதுமாக பரிசோதனை செய்து, அதுகுறித்த அறிக்கையை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

நீதிபதியின் உத்தரவின் பேரில், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ வாரியம், அது தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையில், அந்த பெண், தற்போது உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அவர் குழந்தை பெற்றுக் கொள்வது, அவரது உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளதால், அவரது வயிற்றில் வளர்ந்து வரும் 26 வார கருவை கலைப்பதே சிறந்த வழி என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி சமீர் ஜே தேவ், அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள 26 வார கருவை கலைக்க உத்தரவிட்டு உள்ளார். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும், நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கருக்கலைப்பு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்த சில நாட்களில், குஜராத் உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Chandrayaan 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் 'சிவசக்தி' : பிரதமர் மோடி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.