ETV Bharat / bharat

கண்ணா இதுவெறும் ட்ரெய்லர்தான் - ரஜினி பாணியில் பேசிய குஜராத் முதலமைச்சர்!

author img

By

Published : Nov 10, 2020, 5:16 PM IST

குஜராத் மாநில இடைத்தேர்தலில் பாஜக மூன்று தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான ட்ரெய்லர்தான் இந்த வெற்றி என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

gujarat cm says this is just the trailer
கண்ணா இதுவெறும் ட்ரெய்லர்தான் ரஜினி பாணியில் பேசியுள்ள குஜராத் முதலமைச்சர்

அகமதாபாத்: குஜராத் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழ்நிலையில், மூன்று இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஐந்து இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றி 2022ஆம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்கான ட்ரெய்லர் மட்டுமே என குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என விமர்சித்த அவர், மக்களுடனுடான தொடர்பை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது எனவும், எல்லா இடங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான முடிவுகள் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். எதிர்மறையான பரப்புரை, செயல்பாட்டை வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதாகவும் விஜய் ரூபானி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில், அப்தாசா, மோர்பி, கர்ஜன் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பாஜக, டாங்ஸ், தாரி, கடாடா, காப்ரடா, லிம்ப்டி ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் காலியாகவிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளை பாஜக பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 20 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: கோட்டையை கைப்பற்றுமா காங்கிரஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.