ETV Bharat / bharat

அதானி நிறுவனத்திடம் ரூ.8,000 கோடிக்கு மின்சாரம் வாங்கிய குஜராத் அரசு

author img

By

Published : Mar 4, 2023, 8:18 PM IST

அதானி நிறுவனத்திடம் கடந்த 2021-2022ஆம் ஆண்டுகளில், குஜராத் மாநில அரசு ரூ.8,000 கோடிக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளதாக மாநில மின்துறை அமைச்சர் கனு தேசாய் தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனம் மின்சாரம்
அதானி நிறுவனம் மின்சாரம்

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதானி மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மாநில அரசு எவ்வளவு தொகைக்கு மின்சாரம் வாங்கியுள்ளது என, ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹேமந்த் ஆஹிர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்துறை அமைச்சர் கனு தேசாய், "அதானி மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து 2021-22ம் ஆண்டுகளில் 11,596 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மாநில அரசு வாங்கியுள்ளது.

இதற்கான செலவுத் தொகை ரூ.8,160 கோடி. நிலக்கரி விலையேற்றத்தால் சீரான இடைவெளியில் மின்சார கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், ஒரு யூனிட் மின்சாரம் விலை ரூ.2.83 முதல் ரூ.8.83 காசுகள் வரை உயர்த்தப்பட்டு, மின்சாரம் வாங்கப்பட்டது.

2007ம் ஆண்டு அதானி மின் உற்பத்தி நிறுவனத்துக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையே மின்சாரம் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.89க்கு கொள்முதல் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் இருந்து மின்சாரம் தயாரிக்க அதானி நிறுவனம் நிலக்கரி பெற்று வந்தது. ஆனால் 2011ம் ஆண்டுக்கு பிறகு நிலக்கரி விலையேற்றத்தால் போதிய மின் உற்பத்தியை அதானி நிறுவனத்தால் மேற்கொள்ள முடியவில்லை.

இதனால் குஜராத் அரசு மற்றும் அதானி நிறுவனத்துக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மின்சார கொள்முதல் விலையை உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்தது" என கூறினார்.

அந்த வகையில், 2021ம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரம் விலை ரூ.3.58 ஆக இருந்த நிலையில், 2022ல் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.24 ஆக அதிகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது ஓராண்டுக்குள் மின்சார கொள்முதல் விலையை அதானி நிறுவனம் 102% உயர்த்தியுள்ளது. மின்சார கொள்முதல் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருந்தாலும், 2021ம் ஆண்டை விட கூடுதலாக 7.5 சதவீத மின்சாரத்தை 2022ல் குஜராத் அரசு கொள்முதல் செய்தது தெரியவந்துள்ளது.

அதானி குழுமம் பங்குச்சந்தையில் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. இதனால் அதானி குழும பங்குகள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால் அந்நிறுவனத்துக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டதுடன், முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்கு பின் சந்தை மதிப்பு குறைந்து வருவதால், உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த அதானி, கடும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்த ChatGPT செயலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.