குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வல்சாத் சிவில் மருத்துவமனையில் இறந்த நோயாளிகளின் சடலங்களை இறுதிச்சடங்கிற்கு அனுப்பாமல், அறையில் குவித்துவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்களின் பரிசோதனை அறிக்கையில் கரோனா தொற்று இல்லை என்று வரும்பட்சத்தில்தான், சடலங்கள் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, அந்த மருத்துவமனையில் உள்ள 370 படுக்கைகளும் நிரம்பியுள்ளதால், பலர் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதில், நோயின் தாக்கம் தீவிரமாக உள்ளவர்கள், இறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏராளமான உறவினர்கள், மருத்துவமனை வளாகம் முன்பு சடலத்திற்காகக் காத்திருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதியாக, கரோனா பாதிப்பு இல்லாத சடலங்கள் இரவோடு இரவாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புக்குள்ளான அனைத்துச் சடலங்களும், தகன மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அவசர ஊர்தி வாகனங்கள் முன்பு போட்டோஷூட் - சர்ச்சையில் பாஜக தலைவர்கள்!