ETV Bharat / bharat

தினை மாவுக்கு 5% ஜிஎஸ்டி... ஆல்கஹாலில் மாநில அரசுக்கு உரிமை..! - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு! - நிர்மலா சீதாராமன்

டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட சிறுதானிய தினை மாவு மீது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், ஆல்கஹால் மூலப்பொருள் மீதான வரி விதிப்பு அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்கியது மத்திய அரசு.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 9:58 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பொதுவாக பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கூட்டத்தை தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பேக்கிங் செய்யப்பட்ட சிறுதானிய தினை மாவு மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், 70 சதவீதம் முழு கலவை கொண்ட சிறுதானிய தினை மாவுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வெல்லப் பாகின் (jaggery) மீது விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்து 5 சதவீதமும், மனிதர்கள் அருந்தும் மதுபானங்களை தயாரிக்க பயன்படுத்தும் கூடுதல் நடுநிலை ஆல்கஹால் (Extra Neutral Alcohol) மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுதானிய தினை மீது வரி விலக்கு வேண்டும் எனவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற போதிலும் இதன் சாகுபடி உயர்வதுடன், இந்த விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகளும் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மது மற்றும் மது தயாரிக்கும் அசல் ஆல்கஹால் மூலக்கூறான Extra Neutral Alcohol மீதும் வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உள்ளது என அலகாபாத் நிதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய அரசிடம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இருந்த போதிலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நல்லிணக்கம் பேண வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதர்கள் அருந்தும் ஆல்கஹால் தயாரிக்கும் மூலக்கூறான Extra Neutral Alcohol மீது வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே வழங்குவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வெல்லப் பாகின் மீதான 28 சதவீத வரி விதிப்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் கால்நடை தீவனங்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருள் வாங்கும் செலில் இது குறைவை ஏற்படுத்தும் எனவும் இதனால் கால்நடை தீவனங்கள் மீதான விலை குறைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: தினை மாவுப் பொருட்களின் விலை குறைகிறது.. 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.