உத்தரகாண்ட் மாநிலம், அல்மோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்(ஏப்.25) வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று நடந்தது.
உமேஷ்சிங் டோனிக்கும், மஞ்சு கன்யாள் என்பவருக்கும், கடந்த சனிக்கிழமை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்தத் திருமணத்தை எதிர்நோக்கி மணமக்கள் வீட்டார் பல ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், மணமகன் டோனி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
450 கி.மீ தொலைவில் இருந்த டோனியால், இந்தக் கட்டான சூழலில் திருமணத்திற்கு வர இயலவில்லை. இதற்கிடையே, திருமண தேதியை ஒத்தி வைப்பது தொடர்பாக இருவீட்டாரும் கலந்தாலோசித்தனர்.
ஆனால், திருமணத்திற்கு முன்னதாக செய்ய வேண்டிய கணேஷ் பூஜை ஏற்கனவே செய்யப்பட்டதால், திருமணத்தைத் தள்ளி வைப்பது அவர்களுக்கு சரி எனப்படவில்லை. மணமகனின் மொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஆன்லைனில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, மணமகள் கோலத்தில் இருந்த கன்யாள் வீடியோ காலில், டோனியை திருமணம் செய்துகொண்டார்.