சென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளருமான கேசவ் தேசி ராஜூ உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், இளம் வயதிலயே காந்திய தேசிய சிந்தனையைப் பின்பற்றியவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்ற கேசவ் தேசி ராஜூ, பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தை ஜான் எப் கென்னடி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
அதன்பின் 1978ஆம் ஆண்டு ஐஏஎஸ் அலுவலராகத் தேர்ச்சி பெற்று, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேச பகுதிகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதேபோல் முன்னாள் ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்டப் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
தி லைப் அன்ட் ஆர்ட் ஆப் எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். பண்பாட்டு அரசியல் பிண்ணனியுடன் வாழ்ந்தவர். பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: உலக தலைவர்களை மிஞ்சிய மோடி... மக்கள் ஆதரவில் டாப்!