ETV Bharat / bharat

நாட்டில் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த அரசு முயற்சிக்கிறது - பிரதமர் மோடி

வேறு பல நாகரிகங்கள் மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மாற முடியாமல் அழிந்துவிட்ட நிலையில், இந்திய நாகரிகத்தின் மீள்தன்மையை நாம் போற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

author img

By

Published : Jan 29, 2023, 7:27 AM IST

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் நேற்று (ஜனவரி 27) நடைபெற்ற பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜியின் 1,111ஆவது அவதார மஹோத்ஸவ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜியின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் ஒரு பக்தனாக இங்கு வந்துள்ளேன். தேசத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்காகவும் அவரது ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்.

இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் உலகம் பார்க்கிறது. நமது நாடு வலிமையையும் சக்தியையும் உலகுக்கு நிரூபித்துள்ளது. பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருகிறது. இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல. நமது நாகரிகம், கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஆற்றலின் வெளிப்பாடுதான் இந்தியா.

வேறு பல நாகரிகங்கள் மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மாற முடியாமல் அழிந்துவிட்ட நிலையில், இந்திய நாகரிகத்தின் மீள்தன்மையை நாம் போற்ற வேண்டும். இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த சக்தியாலும் எப்போதும் எதுவும் செய்ய இயலாது.

இன்றைய இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைந்துள்ளது. இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பயணத்தில் சமூக வலிமையின் பங்களிப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாகச் செயல்பட்டுள்ளது. நாட்டில் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளில் நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுகிறது. நாடு முழுவதும் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் சிக்கல் மற்றும் அதன் தரம் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவிய காலங்களை கடந்து இன்று, ஒவ்வொருவரும் முழு அளவில் உணவு தானியங்களை இலவசமாகப் பெறுகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மருத்துவ சிகிச்சை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வீடு, கழிப்பறை, எரிவாயு இணைப்பு மற்றும் மின்சாரம் போன்றவை தொடர்பான ஏழை மக்களின் கவலையையும் அரசு நிவர்த்தி செய்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் 3 கோடி குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் பாதுகாப்பான குடிநீர்க் குழாய் இணைப்பு பெற்றிருந்தன. 16 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீருக்காக தினமும் போராட வேண்டி இருந்தது.

ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் முயற்சியால், இதுவரை 11 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின் மூலம் ராஜஸ்தான் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15,000 கோடி ரூபாய் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாமரையில் தோன்றிய தேவ்நாராயண் ஜியின் 1,111-வது பிறந்த ஆண்டில், இந்தியா ஜி20 தலைமைப் பதவியை ஏற்றுள்ளது.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவச் சின்னமும் பூமியைச் சுமந்து செல்லும் தாமரையைக் குறிப்பது தற்செயலாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மலசேரி துக்ரியின் தலைமை குரு ஹேம்ராஜ் ஜி குர்ஜார், நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷ் சந்திர பஹேரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிபிசியின் மோடி ஆவணப்படம்; 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை பாதிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.