மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேச்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது "ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துக்கு முற்றிலும் இடமுண்டு. அந்த மாற்று கருத்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்போது அது நாட்டு நலனுக்கு எதிராக இருக்கக்கூடாது.
விவசாயிகளின் உணர்வுகளை மதித்து புதிய வேளாண்சட்டங்களில் திருத்தம் கொண்டு வர அரசு தயாராக உள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சிகள் விவசாயிகள் போராட்டங்களை வைத்து அரசியல் செய்து வேளாண் பொருளாதாரத்தை சீரழிக்க முயல்கின்றன" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஜன் ஔசதி மருந்தகங்கள் ஏழைகளை பாதுகாக்கின்றன' - பிரதமர் மோடி