2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொபைல் ஃபோன்கள், சார்ஜர்கள் ஆகியவற்றின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட 400 பொருள்களின் மீது சுங்க வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொபைல் ஃபோன்கள், சார்ஜர்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட விலக்கு திரும்ப பெறப்படுகிறது. 0 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும் உலகளவில் இந்தியாவின் ஏற்றமதி தரத்தை மேம்படுத்தவும் சுங்க வரி விதிக்கப்படுகிறது. மூல பொருள்களை அனைவரிடத்திலும் எளிதான முறையில் எடுத்து செல்ல முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏற்றமதி மேம்படுத்தப்படும்" என்றார்.