மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல்செய்தார்.
அப்போது, பொதுத் துறை வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தை மேலும் பலப்படுத்த, ரூ.20,000 கோடி ஓதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், ரூ.50 லட்சமாக இருந்த மூலதன உச்சவரம்பை, ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2019-20ஆம் ஆண்டு, வங்கிகளின் மூலதன மேம்பாட்டிற்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதேசமயம், 2018-2019இல் ஒரு லட்சம் கோடியும், 2017-2018இல் 90 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஆண்டு நிதிநிலை அறிக்கை அம்சங்களுடன் ஓப்பிடுகையில், இந்தாண்டு மிகவும் குறைவான தொகையே பொதுத் துறை வங்கிகளின் மூலதன மேம்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.