பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப் போவதாக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து நேற்றும் இன்றும் (மார்ச் 15,16) நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசு லாபங்களை தனியாருக்கும், நஷ்டங்களை நாட்டிற்கும் தாரைவார்க்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை பிரதமர் மோடிக்கு அணுக்கமானவர்களுக்கும் விற்பது தேசத்தின் நிதி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். எனவே, வங்கி ஊழியர்களின் இந்தப் போராட்டத்திற்கு நான் முழு ஆதரவளிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்கு பயமா...இத படிச்சிட்டு போங்க!