அதிநவீன தேஜஸ் ரக விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனத்திடம் வாங்க அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தினை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். மாதவன் சமர்பித்தார்.
நாட்டின் பாதுகாப்புத்துறை மேம்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கையாக எல்சிஏ (LCA) தேஜஸ் போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஜனவரி 14ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமெடெட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்திடன்படி, “ஹெச்.ஏ.எல் நிறுவனம் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான 73 தேஜஸ் எம்.கே.-ஐ.ஏ. ரக விமானங்களையும், 10 எல்.சி.ஏ. தேஜஸ் ரக விமானங்களை பாதுகாப்பு துறைக்கு தயாரித்து கொடுக்கும்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 100 வயதில் ரூ.328 கோடி நிதி திரட்டிய உலகப்போர் நாயகன் டாம் மூர் காலமானார்!