பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும் என்று சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நெருக்கடி நிலையில் லாபநோக்கத்தோடு செயல்படுவதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கேபினட் கூட்டத்தில், ராஜீவ் கெளபா முன்னிலையில் தடுப்பூசி விலை குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போது, இரண்டு நிறுவனங்களும் தடுப்பூசி விலையை மறு பரிசீலனை செய்ய உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் ரூ. 600க்கும், தனியார் மருத்துவமனையில் ரூ. 1,200க்கும் வழங்க திட்டமிட்டருந்தது.
புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் அரசு மருத்துவமனையில் ரூ. 400க்கும், தனியார் மருத்துவமனையில் ரூ. 600க்கும் விற்கபடும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நெருக்கடியான நேரத்தில் லாப நோக்கத்தோடு செயல்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.