மத்திய நிதியமைச்சகம் அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நாட்டில் நிலவும் கோவிட்-19 பெருந்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து அமைச்சகங்களும், அதன் துறைகளும் செலவுகைளை குறைக்க வேண்டும். நடப்பாண்டில் செலவீனத்தை 20 விழுக்காடு குறைக்க இலக்கு வைக்க வேண்டும்.
பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்த கட்டுப்பாடு கிடையாது. அதேவேளை, பயணம், அலுவலக செலவுகள், வாடகை போன்ற விவகாரங்களில் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிக்காகவும், இலவச உணவு தாணியங்களுக்காகவும் கூடுதலாக ரூ.1.45 லட்சம் கோடி அரசுக்கு செலவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே மேற்கண்ட சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிளப்ஹவுசில் காஷ்மீர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திக்விஜய சிங்