மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா (57). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மும்பையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு இருந்தாலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று அவரது மனைவி சுனிதா தகவல் தெரிவித்தார்.
தற்போது, மும்பையில் 9,108 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்