ETV Bharat / bharat

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் - புதுச்சேரி மாநில ஆளுநர் சௌந்தரராஜன்

காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
author img

By

Published : Oct 5, 2021, 5:39 PM IST

புதுச்சேரியில் தேசிய மாணவர்படை கடற்படைப்பிரிவின், புதுச்சேரி முதல் காரைக்கால் கடல் சாகசப் பயணத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்தப் பயணத்தில் 25 பெண்கள் உள்பட 60 தேசிய மாணவர் படை கடற்படைப்பிரிவு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 302 கிலோமீட்டர் தூரம் மேற்கொள்ளப்படும் இப்பயணம் இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி முடிகிறது.

யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், 'இளைஞர்கள் சவால்களை எப்படி முறியடிப்பது என்பதற்கான பயணம்தான் இது.

இந்தப் பயணம் பொதுமக்களின் கடல் பயணத்துக்கு முன்னோட்டமாக அமையும். தெலங்கானாவில் நாகேஸ்வரத்திலிருந்து ஸ்ரீசைலம் வரை நதியில் படகு மூலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.

புதுச்சேரியிலும் சுற்றுலாவை வளர்க்க, கடல் பயணம் மூலம் காரைக்காலுக்குச் செல்ல இது முன்னோட்டமாக அமையும். காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு ஏற்கெனவே கப்பல்போக்குவரத்து இருந்தது. இது திடீரென நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க, பல முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

இதுகுறித்து இலங்கை அமைச்சர்கள், தூதர்கள் பேசியுள்ளனர். வெளியுறவுத்துறையில் சில அனுமதி பெற வேண்டியுள்ளது. அதன்பின் இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கும்' எனத் தெரிவித்தார்.

டெங்குவால் பாதிக்கபடும் குழந்தைகள்

மேலும், பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவிக்க முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குபவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தான். எனவே, தேர்தல் நடைபெற வேண்டும் என்பது விருப்பம். ஆனாலும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்துத் தெரிவிக்க முடியாது' என்றார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தொடர்ந்து பேசிய அவர், 'கரோனாவை விட டெங்குவால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனைத்தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா அல்லாத பல தொற்று காய்ச்சல்கள் தற்போது பரவி வருகின்றன. இதற்குத் தேவையான மருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ளவும், நோய்களைத் தடுக்கவும் அரசு தயாராக உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தடுப்பூசி சிறப்பு முகாமில் தமிழிசை ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.