புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார் மனு ஒன்றை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் அளித்திருந்தார். அம்மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிகழ்வுகளில் கிரண்பேடி தலையிடுகிறார், சட்ட விதிகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து அலுவலர்களை மிரட்டி நேரடியாக உத்தரவிடுகிறார் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், யூனியன் பிரதேச விதிகள்படியே, தான் நடப்பதாகவும், புதுவை ஆளுநர் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுவை நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஏகபோகத்தை உடைத்து நிர்வாகத்தை நேர்மையானதாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது. முதலில் புதுவையில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கொள்முதல், ஒப்பந்தம் சீராக்கப்பட்டது, பணமாக வழங்குவது நிறுத்தப்பட்டு நிதி அனைத்தும் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப், சமூக வலைதளம், காணொலி காட்சி மூலம் அலுவலர்களின் அன்றாட நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவு கண்காணிக்கப்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக அறியப்பட்டது. அனைத்து துறைகளும் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்துடன் மத்திய அரசின் தொடர்பில் வைக்கப்பட்டது. நிர்வாகத்தால் வியத்தகு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்களை ஏற்க மறுப்பது அசௌகரியமாகவும்,வேதனையாகவும்தான் இருக்கும் “ என குறிப்பிட்டுள்லார்.
இதையும் படிங்க: எருது விடும் விழாவில் இளைஞரை இழுத்துச் சென்ற மாடு - வைரல் வீடியோ