ETV Bharat / bharat

புதுவையில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை தொடங்கிவைத்த ஆளுநர்

author img

By

Published : Mar 12, 2021, 2:02 PM IST

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 75 வார சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை மாநில துணைநிலைஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

Governor inaugurates 75-week Independence Day celebrations in puducherry

புதுச்சேரி: ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை அடுத்த 75 வாரங்களுக்கு பெரும் கொண்டாட்டங்கள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 75ஆவது சுதந்திர தினவிழாவினை கொண்டாடும்பொருட்டு படகு பேரணி, சைக்கிள் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

75 படகுகள் பங்கேற்ற படகு பேரணி, 75 மாணவர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். பின்னர், காந்தி திடல் மற்றும் தலைமைசெயலகத்தின் முன்பு மரக்கன்றுகளை நட்டு, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

படகு பேரணியை பார்வையிட்ட தமிழிசை

அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் நடத்திய 91ஆவது தண்டி யாத்திரை நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மூத்த சுதந்திர போராட்ட வீரர்களையும் கௌரவித்தார்.

மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழிசை

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலர் அஸ்வானி குமார் உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.