ETV Bharat / bharat

மோனோபோலியாக கூகுள் முயற்சியா? அமெரிக்க நீதிமன்றம் கெடுபிடி!

வலைதளத் தேடலில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் போட்டி நிறுவனங்களைத் தடுக்கிறது என மற்ற போட்டி நிறுவனங்கள் சார்பில் தொடங்கப்பட்ட வழக்கில், ஆப்பிள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கூகுள் பணம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது

Google
கூகுள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:06 PM IST

வாஷிங்டன்: சந்தையில் மோனோபோலியாக கூகுள் நிறுவனம் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

வலைதளத் தேடலில் ஆதிக்கம் செலுத்தியதின் மூலமாக மற்ற போட்டி நிறுவனங்களைத் தடுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறையை ஆதரித்து உள்ளார். அதற்கு காரணம் பயனர்களின் சாதனங்களில் கூகுளை இயல்புநிலை தேடு போறியாக மாற்றி எளிதாக்குவதே நோக்கம் என்றார்.

கூகுள் நிறுவனம் போட்டி நிறுவனங்களின் புதுமைகளை அடக்குவதற்கும், தேடு போறிகளை பூட்டுவதற்கும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பணம் செலுத்துகிறது என நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனத்தை எதிர்த்து வழக்கறிஞர் வாதிடினார்.

வழக்கறிஞர் கூறுகையில், நீதிமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் படி 2021 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனமானது மற்ற நிறுவனங்களுக்கு 26 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கூகுளில் பயனர்கள் தேடும் போது வரும் விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது ஆப்பிள் மற்றும் கூகுளின் தேடு பொறியை இயல்புநிலை தேடுபோறியாக மாற்றும் மற்ற நிறுவனங்கள் மூலம் கூகுள் பணம் சம்பாதிக்கிறது என முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் போட்டி நிறுவனங்களால் இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.

இது குறித்து சுந்தர் பிச்சை கூறியதாவது, ‘போன் உற்பத்தியாளர்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் நிறுவனங்களுக்கு கூகுள் செலுத்தும் பணமானது பயனர்களின் சாதனங்களில் விலையுயர்ந்த பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் பிற மேம்பாடுகளைச் செய்ய தூண்டுவதற்கு பணம் செலுத்துகிறது’ என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மேத்தா இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த பின், கூகுள் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறையை நிறுத்தலாம் என அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க:மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஆட்டோர் ஓட்டுநர்.. ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அழைப்பு.. சென்னையில் இப்படி ஒரு நபரா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.