கோவா: பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலங்களில் பரப்புரை சூறாவளி வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவாவில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்க உள்ளதால், அக்கட்சியும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பரப்புரையில் இன்று(ஜன.16) கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், 13 அம்சங்கள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார்.
-
AAP National Convener & Delhi CM Shri @ArvindKejriwal going door to door to reach out to Goans in Cortalim Constituency.#EkChanceKejriwalak pic.twitter.com/DVjBBnsZVc
— Aam Aadmi Party Goa (@AAPGoa) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">AAP National Convener & Delhi CM Shri @ArvindKejriwal going door to door to reach out to Goans in Cortalim Constituency.#EkChanceKejriwalak pic.twitter.com/DVjBBnsZVc
— Aam Aadmi Party Goa (@AAPGoa) January 16, 2022AAP National Convener & Delhi CM Shri @ArvindKejriwal going door to door to reach out to Goans in Cortalim Constituency.#EkChanceKejriwalak pic.twitter.com/DVjBBnsZVc
— Aam Aadmi Party Goa (@AAPGoa) January 16, 2022
அதில் முக்கியமாக, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும், டெல்லியைப் போலவே, கோவாவில் இலவச மருத்துவமனைகள் திறக்கப்படும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்,
சர்வதேச தரத்துக்கு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும், 24 மணி நேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார்.