ETV Bharat / bharat

சூட்கேசில் சிறுவன் சடலம்; தாய் கைது.. 36 மணி நேரத்திற்கு முன் கொல்லப்பட்டதாக தகவல்! - கோவாவில் கொலை

Bangalore Suitcase murder: கோவாவில் மகனை கொலை செய்த தாய் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் கொல்லப்பட்டு 36 மணி நேரத்திற்கு மேல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Autopsy reveals child was smothered to death 36 hours earlier
சிஇஓ தாய் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 1:42 PM IST

சித்ரதுர்கா (கர்நாடகா): கர்நாடக மாநிலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத் (39). இவர் தனது 4 வயது மகனுடன், கடந்த ஜனவரி 6ஆம் தேதி, வடக்கு கோவாவில் உள்ள கண்டோலிமில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளார்.

அவர் ஹோட்டலில் இருந்து செல்லும்போது அவரது மகன் உடன் இல்லாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணையத் துவங்கினர். பின்னர் அவர் கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு காரில் செல்வதை அறிந்து, அந்த கார் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு, சுசானா சேத்-ஐ கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் கைது செய்தனர்.

தொடர்து அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடமிருந்த சூட்கேசில் மகனது உடல் இருந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் சிறுவனின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுவன் கொலை செய்யப்பட்டு 36 மணி நேரத்திற்கு மேல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சாதாரணமாக உயிரிழந்தவர்களின் உடலில் இருக்கக்கூடிய ரிகோர் மோடிஸ் என்னும் திரவம் வற்றி போக 36 மணி நேரம் ஆகும். ஆனால், சிறுவனின் உடலில் அந்த திரவம் வற்றி போய் இருந்துள்ளது. மேலும், சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறியதற்கான தடயம் ஏதும் இல்லாததால், சிறுவன் மூச்சுத் திணறலால் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியில் இருக்கும் சுசனா சேத், அந்த துறையில் 12 வருட அனுபவம் கொண்டவர். செயற்கை நுண்ணறிவுக்கான (Al Ethics List) 100 புத்திசாலியான பெண்கள் பட்டியலில் அவரும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து - 5 பேர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.