முசாபர்பூர்: பீகார் மாநிலத்தில் தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக காதலி கூறியவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற காதலனின் பிறப்பு உறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், தனது காதலனை அழைத்து தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உதவிக்கு வருமாரும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய காதலன், காலை ஜிம்மிற்குச் செல்லவிருந்த நிலையில் காதலி அழைத்தவுடன் நேராக காதலி வீட்டிற்குச் சென்றார். அங்கு காதலனின் வருகைக்காக காத்திருந்த காதலியின் குடும்பத்தினர், காதலன் வந்தவுடன் அவரை வீட்டிற்குள் இழுத்து சரமாரியாக தாக்கினர். இளம்பெண்ணின் சகோதரர் காதலனை தாக்கி, அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், செல்போன், பணம் ஆகியவற்றை பிடிங்கி, காதலனின் பிறப்பு உறுப்பை வெட்டியிருக்கிறார்.
இதனால், செய்வதறியாது திகைத்திருந்த பாதிக்கப்பட்ட காதலன், ஒருவழியாக அங்கிருந்து தப்பித்துச் சென்றார். தொடர்ந்து அந்த இளைஞர் பைரியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை, இளம்பெண்ணின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மீது புகார் அளித்தார். மேலும், தனது மகனும் இளம்பெண்ணும் காதலித்து வந்ததையும் உறுதிபடுத்தினர். இதனால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் சதி திட்டம் தீட்டி தனது மகனை வரவழைத்து தாக்கியதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை என்கவுண்டர்; ஆர்டிஓ முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய திட்டம்!