ஆந்திர மாநிலம் நெரெட்மெட் பகுதியைச் சேர்ந்த அமிலியா என்பவர், அப்பகு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டிலிருந்த 180 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
அந்த விசாரணையில், அமிலியாவின் பேத்திதான் தங்க நகைகளை கொள்ளயடித்தது தெரியவந்தது. அதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது காதலனுக்கும் கொள்ளையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சேலம் நகைக்கடையில் கொள்ளை!