ETV Bharat / bharat

ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை: உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம் - girl murdered for wearing jeans in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜீன்ஸ் அணிந்ததால், சிறுமி உறவினர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை
ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை
author img

By

Published : Jul 23, 2021, 7:48 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், டியோரியா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவரின் உடல் பாலம் ஒன்றில் பல மணி நேரமாக தொங்கிக்கொண்டிருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் சிறுமி அணிந்து வந்ததாகவும் அவரை ஜீன்ஸ் அணியக்கூடாது என அவரது உறவினர்கள் வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் குடும்பத்தினர் சிறுமியை அடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை
ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை

இதுகுறித்து சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ள நிலையில், சிறுமியின் தாத்தாவும், மாமாக்களும் சிறுமியைத் தலையில் பலமாக தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமி படுகாயமடைந்து, சுயநினைவிழந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்ததால், அவரது உடலை பாலத்துக்கு அடியில் தொங்கவிட்டுள்ளனர்.

சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது தாத்தாவை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புள்ள மற்ற உறவினர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு: போக்சோ சட்டத்தில் இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.