நாளந்தா: பீகாரில் சிறுமியின் தலையில் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் பீகார் ஷெரீப் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் உயிர் பிழைக்க முடியவில்லை. அதன் பின்னர் காவல்துறையின் கூற்றுப்படி, தீப்நகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கஞ்சபர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது எனவும், இறந்த சிறுமியின் பலோ யாதவின் மகள் துஷி குமாரி என அடையாளம் காணப்பட்டார்.
சம்பவம் நிகழ்ந்தது எப்படி? பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சியைப் பார்க்க சிறுமி சென்றுள்ளார். இதனிடையே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி படுகாயமடைந்தார்.
பின்னர் பிறந்தநாள் விழாவில் மது அருந்திய இளைஞர்கள் சிலர் குடிபோதையில் நடனமாடியவர்களுடன் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கிகளை அசைத்து நடனமாடியதாகத் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர்கள் மத்தியில் யாரோ ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகம் எழுகிறது.
அதனையடுத்து தீப்நகர் காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் குமார் ஜெய்ஸ்வால் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினார். அந்தப் பகுதியில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
பின்னர் இதுகுறித்துப் பேசிய சஞ்சய் குமார், "சம்பவம் புகாரளிக்கப்பட்டுள்ளது. போலீசார் குழு இந்தச் சம்பவம் நடந்ததை விசாரித்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:CCTV: பஸ் கண்ணாடியை உடைத்த அந்த மூன்று பேர்; வெளியான பகீர் தகவல்